தமிழ் மக்கள் சார்பாக வடக்கு மாகாண சபைக்கு நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு சட்ட அறிஞர். மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர். ஆன்மீகவாதி தனக்காக இல்லாமல் மக்களுக்காக சேவையாற்றக் கூடியவர்.
கூட்டமைப்பிலுள்ள ஐந்து கட்சிகளினதும் ஏகோபித்த முடிவின் படியே அவர் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார். இவரைத் தெரிவு செய்ததால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குத்துவெட்டு, இரா.சம்பந்தனின் தலைமைக்கு ஆபத்து என்று சிங்களப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
சிங்கள பேரினவாதக் கட்சிகள் சி.வி.விக்னேஸ்வரன் நிச்சயம் முதலமைச்சராவார் நிச்சயம் முதலமைச்சராவார் என்று உறுதியாகத் தெரிந்த பின்னர் கனவில் பிதற்றுவது போல் ஏதோதோ கூறி வருகின்றன.
தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் வழங்காததாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு சொல்வதை கேட்டு செயற்பட வேண்டும் என்பது தவறு. தமிழ் மக்களுக்கும் சுயகெளரவம் இருக்கின்றது. அரசுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் செயற்படுபவர்கள் பேசுபவர்களுக்கு அரசு புலி முத்திரை குத்தி வந்துள்ளது. இந்த வகையில் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராக நியமித்ததால் அவர் மீதும் பேரினவாதக் கட்சிகள் புலி முத்திரை குத்துகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment