Home » , , , » கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நீதியரசர் விக்னேஸ்வரனை தெரிவுசெய்வதற்கு தீர்மானம் : இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நீதியரசர் விக்னேஸ்வரனை தெரிவுசெய்வதற்கு தீர்மானம் : இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை நியமிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.


 இன்று காலை கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவவிடயம் குறித்து ஆராயப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்று தெரிவிக்கப்படுகின்றது.

 வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடியிருந்தது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென்று ஒரு சாராரும் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி.யை நியமிக்க வேண்டுமென்று மற்றொரு சாராரும் வலியுறுத்தியிருந்தனர்.

இதனால் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. சனிக்கிழமை நடைபெறவிருந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அன்றைய தினம் நடைபெறவில்லை. அந்தக் கூட்டமும் இன்று திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு கொழும்பு பம்பலப்பிடடியிலுள்ள தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

 முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று மாலை  தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com