வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் உட்பட ஏனைய வேட்பாளர்களை தெரிவு செய்வது குறித்து ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் குழு இன்று கூடவுள்ளது.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று முற்பகல் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. இந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இன்றைய கூட்டத்தில் வேட்பாளர் தெரிவு குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் யாழ். மாவட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகினற்து.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சிலரும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் நம்பகரமாக தெரியவருகின்றது.

.png)
+-+Copy.png)

0 comments:
Post a Comment