யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது;
''மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான உரிமை அவர்களுக்கு இருக்க வேண்டும். அந்த உரிமை எவ்விதத்திலும் மறுக்கப்படக்கூடாது. இதற்கு முன் நடைபெற்ற தேர்தல்களில் மக்களின் அடையாள அட்டை, வாக்களிக்கும் அட்டை என்பன தேர்தலுக்கு முதல் நாள் ஆயிரக்கணக்கில் பறிக்கப்பட்டன.
இந்தத் தேர்தல் இன்று நடைபெறுவதற்கு முக்கிய காரணம் சர்வதேச சமூகத்தின் அழுத்தம். வட மாகாண மக்கள் தமது ஜனநாயக உரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்தி தங்களுடைய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான சுதந்திரம் அவர்களுக்கு உறுதிசெய்யப்பட வேண்டும்.''






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment