இன்று மாலை 3.30 மணியளவில் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இருந்து அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையிலான வேட்பாளர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்தினை சென்றடைந்தனர்.
மாலை 3.45 மணியளவில் அமைச்சர் றிஸாட் பதீயுதீன் தலைமையில் வேட்பாளர்களான எந்திரி றொபேட் பீரிஸ்,ஏ.றிப்கான் பதீயுதின்,எஸ்.ரி.லிங்கேஸ்வரன் ஆகியோர் இணைந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக்,அமைச்சரின் இணைப்பாளர் என்.எம்.முனவ்பர் ஆகியோர் கலந்து கொண்டதோடு நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
மன்னாரில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு சார்பாக எந்திரி றொபேட் பீரிஸ்,ஏ.றிப்கான்பதீயுதின்,எஸ்.ரி.லிங்கேஸ்வரன்,ஏ.எல்.மில்ஹான்,எஸ்.எச்.அனீஸ் கரீம், எம்.எம்.அமீன்,செல்வகுமரன் டிலான்,அலிக்கான் சரீப் ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment