தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான அங்கத்துவ கட்சிகளின் ஆசனப் பங்கீடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஒவ்வொரு கட்சிகளும் தமது வேட்பாளர்கள் தொடர்பான விவரங்களை தயார் செய்துள்ளன. அதனடிப்படையில் யாழ். மாவட்டத்தில் பொது வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்ரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலர் சி.வி.கே.சிவஞானம், பாஷையூரைச் சேர்ந்த இ.ஆர்னல்ட், யாழ்ப்பாண வர்த்தக சங்கத் தலைவர் இ.ஜெயசேகரம், வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் பொ.கனகசபாபதி, சாவகச்சேரியைச் சேர்ந்த சட்டத்தரணி சயந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனின் சகோதரர் சர்வேஸ்வரன், சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன், தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த கஜதீபன் மற்றும் ப.தர்சானந், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம், மாநகரசபை உறுப்பினர் க.விந்தன் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முல்லைத் தீவு மாவட்டத்தில் பிரஜைகள் குழுத் தலைவர் க.ரவிகரன் மற்றும் க.சிவநேசன் (பவான்) ஆகியோர் போட்டியிடவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் முழுமையான வேட்பாளர் பட்டியல் நாளை உத்தியோபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment