இது தொடர்பில் இறுதி முடிவு எட்டுவதற்காக இன்று மாலை யாழ். மாவட்டத்திலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதுவரை எட்டப்பட்ட முடிவுகளின் பிரகாரம் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 7 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ் 4 ஆசனங்களும், ரெலோ 3 ஆசனங்களும், புளொட் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலா 2 ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலா 3 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, ரொலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலா 2 ஆசனங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட்டுக்கு தலா ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் ரெலோ 3 ஆசனங்களும், இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலா 2 ஆசனங்களும் புளொட்டுக்கு ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மன்னார் மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆசனம் ஒன்றைக் கேட்டபதனால் இது தொடர்பில் இறுதி முடிவு செய்யப்படவில்லை. வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் ரெலோ ஆகிய கட்சிகள் தலா 3 ஆசனங்களைக் கோருவதால் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்றைய தினம் இறுதி முடிவு எட்டப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment