இன்றைய தினம் தெல்லிப்பழை துர்க்காபுரம் திருவள்ளுவர் சனசமூக நிலைய முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வுகள் நிலையத் தலைவர் ஆ.கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற போதே நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த காலங்களில் எமது சிறார்கள் இயல்பாகக் கல்வியைத் தொடர முடியாத ஓர் துர்பாக்கிய நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது நிலவுகின்ற அமைதிச் சூழலில் எதுவித இடையூறும் இன்றி எமது சிறார்களால் கல்வியை தொடர முடிகிறது.
எனவே இந்த நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்தியவர்களாக நடைமுறைச் சாத்தியமான வழியில் அரசியல் பணியினை முன்னெடுத்துச் செல்லும் சிறந்த அரசியல் தலைமையினை தெரிவு செய்வதனூடாகவே எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும். மக்கள் ஓரணியில் அணி திரண்டு எமக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் எமது அரசியல் உரிமைகளை சாணக்கியமான முறையில் வென்று எடுக்க முடியும்.
தற்போதைய சூழ்நிலையில் உங்கள் பிரதேசத்தில் பல்வேறுபட்ட உட்கட்டுமானப் பணிகளும் அபிவிருத்திப்பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. இவற்றினை எம்மாலே மேற்கொள்ள முடியும் இதனை உணர்ந்தவர்களாய் உங்களுடைய வளமான எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டவர்களாய் இப்பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளில் அக்கறை கொண்டவர்களாய் நடைமுறைச் சாத்தியமான முறையில் சிந்தித்து செயற்படும் எமது தலைவரின் அரசியல் கரங்களை பலப்படுத்தி எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஓரணி திரளவேண்டும்.
எனவே எமது தமிழ் சமூகம் தொடர்ந்தும் தோற்றுப்போன சமூகமாக இருக்கமுடியாது. தமிழ்மக்களின் தலைநிமிர்வு வாழ்விற்காய் நடைமுறைச் சாத்தியமான வழியில் சென்று எமது நிலத்தில் மக்கள் பலத்தில் அரசியல் உரிமைகளை வென்றெடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்பதாக முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், வெற்றியீட்டிய சிறார்களிற்கான பரிசில்களை மாவட்ட அமைப்பாளர் கமல் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொண்ட அதிதிகள் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வலிவடக்கு பிரதேச அமைப்பாளரும், வலிவடக்கு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான இ.ஜெயபாலசிங்கம்(அன்பு), ஈ.பி.டி.பியின் வட்டுக்கோட்டை பிரதேச இணைப்பாளர் வே.மகேந்திரம்(வள்ளுவன்), முன்பள்ளி இணைப்பாளர் செல்வரஞ்சனா, தெல்லிப்பழை பனை தென்னை வள அ.கூ.சங்க பொதுமுகாமையாளர் சிவஞானம், கூட்டுறவுச் சங்க தலைவர் அருணகிரிநாதர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment