Home » , , » வாக்காளர்கள் விரும்பிய வாக்குசாவடியில் வாக்களிக்க அனுமதி: தேர்தல் செயலகம்

வாக்காளர்கள் விரும்பிய வாக்குசாவடியில் வாக்களிக்க அனுமதி: தேர்தல் செயலகம்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் வாக்காளர்கள், எந்த வாக்குச் சாவடியிலும் வாக்களிப்பதற்கான அனுமதியை பெற முடியும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.


தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இதனை அறிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்களில் வாக்காளர் ஒருவர் அவர் வசிக்கின்ற பிரதேசத்துக்குறிய வாக்குசாவடியிலேயே வாக்களிக்க முடியும் என்ற நிலை காணப்பட்டது.

 எனினும் தகுந்த காரணங்களை சுட்டிக்காட்டி, அவர் மாற்று வாக்குசாவடி ஒன்றில் வாக்களிப்பதற்கு அனுமதி பெற முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 1988ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் சட்டத்தின், 1993ம் ஆண்டு திருத்தப்பட்ட ஏழாம் இலக்க சட்டத்தின் 125 ஏ சரத்தின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com