Home » , , » வட மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழத் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் நாளை தெரிவு !

வட மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழத் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் நாளை தெரிவு !

வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழத் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக கூட்டமைப்பின் வேட்பாளர் நியமனக் குழு நாளை யாழ்ப்பாணத்தில் கூடவுள்ளதாக கட்சியின் உயர்மட்டம் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


 கொழும்பு- தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற மூன்று நாள் கலந்துரையாடலின் பின்னர் கட்சியின் முதன்மை வேட்பாளராக சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில்,

 போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக 10 பேர் கொண்ட வேட்பாளர் நியமனக் குழு நாளை யாழ்.மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் கூடவுள்ளது.

 இந்நிலையில் நாளை மாலை, போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதேவேளை மாகாணசபை தேர்தலில் மிக முக்கியமான யாழ்.மாவட்டத்தில் செல்வாக்குள்ள, தகுதி வாய்ந்த பலர் ஏற்கனவே கூட்டமைப்பின் தலைமையினாலும், கட்சிகளில் தலைமைகளினாலும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com