Home » , , , » வடக்குத் தேர்தலில் முஸ்லிம்களின் ஒத்துழைப்பு அவசியம் : சம்பந்தன்

வடக்குத் தேர்தலில் முஸ்லிம்களின் ஒத்துழைப்பு அவசியம் : சம்பந்தன்

வட மாகாணத் தேர்தலில் முஸ்லிம்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம் சமூகத்தின் கௌரவத்தையும் சுயமரியாதையும் பாதுகாக்கக்கூடிய முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



வடக்கு தேர்தல் குறித்த முஸ்லிம் புத்திஜீவிகள் குழு ஒன்றிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றபேதே கூட்டமைப்பின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் முஸ்லிம் புத்திஜீவிகள் சார்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் தலைவர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத், யாழ். சிவில் சமூக செயற்பாட்டாளர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின், மீள்பார்வை பத்திரகையின் ஆசிரியர் சிராஜ் மஷ்ஹ_ர் மற்றும் டாக்டர் ரிபாஸ், அப்துல் வாஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இச்சந்திப்பின் போது, தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பரஸ்பர புரிந்துணர்வுடன் பொது நலன்களில் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் கடந்த காலங்களில் அவ்வாறான புரிந்துணர்வை கட்டியெழுப்பக்கூடிய சந்தர்ப்பங்கள் குறிப்பாக, கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது இருந்தும் கூட அந்த சந்தர்ப்பங்கள் சமூக நலன்களை முதன்மைப்படுத்திய வகையில் சரியாகப் பயன்படுத்தப்படாத நிலையில் தற்போது வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் தருணத்தில், தமிழ் - முஸ்லிம் உறவினை வலுப்படுத்தி வடக்கு, கிழக்குப் பிராந்தியங்களில் இரு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்க அரசியலைக் கட்டியெழுப்புவதற்கான தொடக்க புள்ளியாக, இந்த மாகாண சபைத் தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com