ஜனாதிபதியின் இந்தக் கருத்துத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில் கருத்து என்ன வென்று அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேற்று "உதயன்' வினாவியது. இதற்குப் பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: ஜனாதிபதி, தான் நினைக்கும் நேரங்களில் ஒவ்வொன்றைச் சொல்லி வருகின்றார்.
அவரின் ஒவ்வொரு வேறுபட்ட கருத்துகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. காணி, பொலிஸ் அதிகாரங்கள் முக்கியமான விடயங்கள். இவை குறித்து தற்போது ஜனாதிபதி, தெரிவிக்கும் கருத்துக்களைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு உரிய நேரத்தில் தமிழ்க் கூட்டமைப்பு பதிலடி கொடுக்கும். அது வரை பொறுத்திருங்கள் என்று தெரிவித்தார் சம்பந்தன்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment