நுவரெலியா மாத்தளை மாவட்டங்களிலும் தமிழ் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் ஜே.வி.பி.யின் நடவடிக்கைகள் தொடர்பாக கேட்ட போதே விஜித ஹேரத் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், வடக்கு வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தலுக்கான எமது கட்சியின் வேட்பாளர்கள் தெரிவு தற்போது இடம்பெற்று வருகிறது.
வடக்கில் 5 மாவட்டங்களிலும் கணிசமான அளவு தமிழ் முஸ்லிம் வேட்பாளர்களையும் அதேபோன்று சிங்கள வேட்பாளர்களையும் களமிறக்கவுள்ளோம்.
வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கும் மூவின வேட்பாளர்களையும் நிறுத்தவுள்ளோம்.
வடக்கு வேட்பாளர் தெரிவுக்குழுவின் தலைவராக சுனில் ஹன்துன்னெத்தி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளதோடு வடமேல் மாகாணத்திற்கு அநுரதிசாநாயக்க எம்.பி.மற்றும் விமல ரத்னாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதோடு மத்திய மாகாணத்திற்கு நானும், லால் காந்தவும் நியமிக்கப்பட்டுள்ளோம்.
விரைவில் வேட்பாளர்கள் தெரிவு பூர்த்தி செய்யப்படும் இதன் பின்னர் பெயர்கள் வெளியிடப்படும். தேர்தலுக்கான தொனிப் பொருள் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
மாகாண சபை முறைமையால் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. இதனை 1987முதல் நாம் எதிர்க்கின்றோம். ஆனால் அது அரசியலமைப்பில் சட்டமாக்கப்பட்டுள்ளது. எனவே மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுகின்றோம்.
இதன் போது மாகாண சபை முறைமையால் நாட்டுக்கோ மக்களுக்கோ நன்மை இல்லை என்பதை தெளிவுப்படுத்துவோமென்றும் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment