வட மாகாண சபைத் தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவெடுப்பேன். கண்காணிப்பாளர்களை தேர்தலில் ஈடுபடுத்தவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க முடியாத நிலையில் நான் இருக்கின்றேன் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
பொதுநலவாய அமைப்பு, ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, சார்க் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய கண்காணிப்பு அமைப்புக்களை நாங்கள் நாடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது
வடக்கு மாகாண சபைத் தேர்தலை சர்வதேச அமைப்புக்கள் கண்காணிப்பதற்கு இடமளிக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன. தேர்தல் ஒன்றை சர்வதேச அமைப்புக்கள் கண்காணிக்கவேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் சட்டத்தில் எந்தவொரு விடயமும் இல்லை. உள்ளூர் அமைப்புக்கள் தேர்தலை கண்காணிக்க முடியும். எனினும் இது தொடர்பான வரலாறுகள் உள்ளன.
இந்நிலையில் 1982 ஆம் ஆண்டு முதலில் தேசிய மட்டத் தேர்தல் ஒன்று கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. மாகாண சபைத் தேர்தலை பொறுத்தமட்டில் 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சர்வதேச அமைப்புக்களினால் கண்காணிக்கப்பட்டது.
தற்போதைய நிலைமையில் வட மாகாணசபைத் தேர்தல் முதற்தடவையாக நடைபெறுகின்றமையின் காரணமாக இவ்வாறு கண்காணிக்கவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை நிராகரிக்கவோ அல்லது இது குறித்து அவதானம் செலுத்தாமலோ இருக்க முடியாது.
எவ்வாறெனினும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் விவகாரம் தொடர்பில் அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு தேர்தல் ஆணையாளர் என்ற வகையில் நான் தீர்மானம் ஒன்றை எடுப்பேன். தேர்தல் ஆணையாளர் என்ற வகையில் தனித்து முடிவெடுக்கமாட்டேன். எனது அனைத்து உத்தியோகத்தர்களுடனும் கலந்துரையாடிவிட்டே தீர்மானம் எடுப்பேன்.
தற்போதைய நிலைமையில் பொதுநலவாய அமைப்பு ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சார்க் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய கண்காணிப்பு அமைப்புக்கள் உள்ளன. தேர்தலை கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைப்பது என்றால் இந்த அமைப்புக்களிடம் நாங்கள் செல்லலாம். எவ்வாறெனினும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டே இது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

.png)
+-+Copy.png)

0 comments:
Post a Comment