வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தம்மை மீண்டும் வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் பிரகாரம் 4989 பேர் வட மாகாணத்துக்கான வாக்காளர் இடாப்பில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மொத்தம் 10243 விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும் 5254 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் வேறு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் மீண்டும் தம்மை தமது சொந்த இடங்களில் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வதற்கான சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டன.
இதன்போது சாதாரண விண்ணப்பங்களாக 7087 விண்ணப்பங்கள் கிடைத்தன. பின்னர் மேன்முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்ட காலத்தில் 3156 விண்ணப்பங்கள் கிடைத்ததுடன் மொத்தமாக 10243 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1412 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டன.
எஞ்சிய 8831 விண்ணப்பங்களில் 4989 விண்ணப்பபங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றில் 166 வாக்காளர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்துக்கு 3135 வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்துக்கு 370 வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 1318 வாக்காளர்கள் இணைக்கப்பட்டனர்.
அந்த வகையில் மொத்தமாக 4989 விண்ணப்பபங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய வாக்காளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 5254 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த செயற்பாட்டின் அடிப்படையில் பார்க்கும்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்காளர்களின் எணணிக்கை சிறியதாக இருக்கலாம். ஆனால் ஒருவருக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் உறுதிபடுத்தப்பட்டால் அதனை அந்த வாக்காளரின் பக்கத்திலிருந்து பார்க்கும்போது அது பெரிய சாதனையாகவே அமைந்துள்ளது என்றார்

.png)
+-+Copy.png)

0 comments:
Post a Comment