அதே போன்று முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சிக்காலத்திலும் தமிழ் மக்கள் அதிக நன்மைகளை பெற்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவரது ஆட்சிக்காலத்திலேயே மலையக மக்களுக்கு அதிக வாக்குரிமையும் கிடைத்து அவர்களும் அரசியல் நீரோட்டத்தில் தீர்மானம் எடுக்கும் சக்திகளாக மாற்றம் கண்டனர்.
இதன் காரணமாகவே இன்று மலையகத்தில் தொழிற் சங்க அரசியல் வலுப்பெற்றுள்ளது. ஆனால் இன்றைய நிலையில் சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகள் திட்டமிட்டு முடக்கப்படுவதற்கான திரை மறைவு நடவடிக்கைகளே பல்வேறு மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே மலையக மக்கள் தமது எதிர்காலம் அரசியல் இருப்பு என்பன குறித்து தீர்க்கமாக சிந்தித்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். மலையக மக்களுக்கு அதிக நன்மைகளை செய்த ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் மாகாண சபைகளில் வெற்றி பெற செய்ய ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் எமது உரிமைகளை பாதுகாக்க முடியுமென சச்சிதானந்தன் மேலும் தெரிவித்துள்ளார்






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment