Home » , , , , » விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்த தமிழரசுக்கட்சி யாழ்.கிளை எதிர்ப்பு; தலைவர் சம்பந்தனுக்கு அவசர கடிதம்

விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்த தமிழரசுக்கட்சி யாழ்.கிளை எதிர்ப்பு; தலைவர் சம்பந்தனுக்கு அவசர கடிதம்

வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை நிறுத்துவதற்கு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துள்ள முடிவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.கிளை கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.


கட்சிகளின் ஒட்டுமொத்த விருப்பத்தைப் பெறாமல் தலைவர் ஒரு தலை பட்சமாக எடுத்துள்ள முடிவை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதனை உடனடியாக மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அது தலைவர் சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான கடிதம் ஒன்று அவசர அவசரமாக தமிழரசுக் கட்சியின் யாழ். கிளையினால் தலைவர் சம்பந்தனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ள போதும் விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்தும் முடிவை மீள்பரிசீலனை செய்யும் நோக்கம் எதுவும் தலைவர் சம்பந்தனிடம் இல்லை என்றும் இது கட்சியின் யாழ். கிளை உறுப்பினர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அறியமுடிந்தது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com