வடக்கு மாகாணசபை தேர்தல், வாக்கு எண்ணும் நிலையங்களை யாழ்.மாவட்டத்தில் இம்முறை பாடசாலைகளில் நடாத்துவதற்கு மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந் நடவடிக்கைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இவ்விடையத்தில் அரசாங்க அதிபர் இதற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் மாநகரசபை, உள்ளுராட்சி மன்றங் களுக்கான தேர்தல்கள் அனைத்திற்கும் வாக்கு எண்ணும் நிலையம் யாழ்.மாவட்டச் செயலகத்திலேயே அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வாண்டு வடக்கு மாகாணசபை தேர்தல் வாக்கு களை எண்ணும் நிலையத்தை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் அமைக்கவுள்ளதாக மாவட்டச் செயலர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந் நடவடிக்கைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருக்கின்றது. விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், விடயம் தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலர் சுதந் தரம் அருமைநாயகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டிருந்தோம்.
அதற்கு பதில ளித்த அரசாங்க அதிபர், மாவட்டச் செயலகத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும்,இதனாலேயே பாடசாலைகளில் வாக்கு எண்ணும் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார். நாங்கள் அரசாங்க அதிபருக்கு திட்டவட்டமாக கூறியிருக்கின்றோம். வாக்கு எண்ணும் நிலையங்களை அமைப்பதாயின் ஒரு பாடசாலையில் அமைக்கவேண்டும். பல பாடசாலைகளில் அமைக்க முடியாது. அவ்வாறு அமைக்கப்பட்டால் விருப்பு வாக்கு எண்ணும்போது பல அசெ ளகரியங்கள் ஏற்படும்.
இதனை விடவும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். என்பதை தெளிவாக கூறியிருக்கின்றோம். அத னை ஏற்றுக் கொண்டுள்ள அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகத்திற்குள் இடப்பற்றாக்குறை நில வுவதாலேயே மாற்று திட்டம் குறித்து பரிசீலித்ததாக கூறியுள்ளார். ஆனால் இந்தப் பிரச்சினைக் கு அரசாங்க அதிபர் உரிய தீர்வு காணவேண்டும். இவ்வாறான நடவடிக்கையினால் அரசாங்க அதிகாரிகளுக்கும் பிரச்சினை, அரசியல்வாதிகளுக்கும் பிரச்சினை.
எனவே அரசாங்க அதிபர் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வை காணாத பட்சத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மட்டத்திற்கு இந்தப் பிரச்சினையை தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுத்துச் செல்லும், என அரசாங்க அதிபருக்கு நாம் கூறியுள்ளோம்.
எனவே அரசாங்க அதிபர் இதற்கு உரிய நடவடி க்கை எடுப்பார் என நாம் நம்புகிறோம். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போதும், ஜனாதிபதி தேர்த லின்போதும் மாவட்டச் செயலகத்திலேயே வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டன, ஆனால் இவ்வாண்டு மாற்றிடம் தேடப்படுவதன் நோக்கம் குறித்து எமக்கு சரியாக தெரியவில்லை, இந்நிலையில் பாடசாலைகளில் வாக்கு எண்ணும் நிலையம் அமைக்கப்படுகின்றபோது போதியளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் எனவும் பொறுப்புவாய்ந்த அதிகாரி களுக்கு எடுத்துக் கூறுவோம். அது குறித்தும் கூட்டமைப்பு அதிக கண்காணிப்புடன் இருக்கின்றது என அவர் மேலும் கூறியுள்ளார்.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment