Home » » வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா 1919 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா 1919 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.

எதிர்வரும் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என அறிந்து கொள்ள 1919 
என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம். என இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் கூறுகிறது.

தொலைபேசி இலக்கம் 1919 மூலம் வினவி தமக்கு உரிய மாவட்டத்தையும் தமது தேசிய அடையாள அட்டை எண்ணையும் தமது முழுப் பெயரையும் அறிவித்து தமது வாக்குரிமை வழங்கும் பகுதியின் பெயரையும் மாவட்ட எண்ணையும் வாக்காளர் பட்டியலிலுள்ள தமது வரிசை எண்ணை அறிந்துகொள்ளலாம்.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் பெற்றுக்கொள்ளக்கூடிய இச் சலுகையை இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமும் தேர்தல் திணைக்களமும் ஒன்று சேர்ந்து ஏற்படுத்தியுள்ளன.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com