Home » » வடமாகாணசபைத் தேர்தல் கண்காணிப்பில் 25 வெளிநாட்டவர்கள்!

வடமாகாணசபைத் தேர்தல் கண்காணிப்பில் 25 வெளிநாட்டவர்கள்!

வடக்கு மாகாணசபைக்கு நடைபெறவுள்ள தேர்தலைக் கண்காணிக்க 25 இற்கும் அதிகமான வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளதுடன் தேர்தல்கள் ஆணையாளர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ அமைப்பு, 17 கண்காணிப்பாளர்களை அனுப்பவுள்ளது.

இந்த தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ அமைப்பில் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா மூன்று கண்காணிப்பாளர்களும், பூட்டான், மாலை தீவு, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா இரண்டு கண்காணிப்பாளர்களும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு வரும் இந்தக் குழுவில் இடம் பெறவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தேர்தல் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக இவர்கள் வடக்கு மாகாணத்துக்குச் செல்வர் என குறிப்பிட்டுள்ள தேர்தல் செயலகம் அவர்களை விட கொமன்வெல்த் அமைப்பின் சிறப்பு குழுவொன்றும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டள்ளார்.

அது மட்டுமல்லாது பவ்ரல் அமைப்பின் அழைப்பின் பேரில், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான தெற்காசிய வலையமைப்பைச் சேர்ந்த எட்டு வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் இலங்கை வரவுள்ளனர்.

இந்த குழுவில், தாய்லாந்து, ஜப்பான், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், நேபாளம், இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடக்கப்படடிருப்பதாக குறிப்பிட்ட பவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் றோகண ஹெட்டியாராச்சி தேவையேற்பட்டால் இந்த வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com