Home » » எங்களுடைய பிரதேசங்களை நாங்களே நிர்வகிக்கின்ற உரிமைக்காகன போராட்டமே இத் தேர்தல்களம்,சீ.வீ.கே.சிவஞானம்.

எங்களுடைய பிரதேசங்களை நாங்களே நிர்வகிக்கின்ற உரிமைக்காகன போராட்டமே இத் தேர்தல்களம்,சீ.வீ.கே.சிவஞானம்.

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியகூட்டமைப்பு போட்டியிடுவது தொடர்பாக சில கேள்விகள் எழுப்படுகின்றது . 
 இந்த விடயம் தொடர்பில் முக்கியமான
இரண்டு விடயங்களை நாங்கள் தெளிவுபடுத்தப்படவேண்டும் .13 வது அரசியல் திருத்த சட்டதையோ அல்லது மாகாண சபை முறைமையையோ எங்களுடைய இனப்பிரச்சனைக்கான தீர்வாக நாங்கள் ஒருபோதும் ஏற்றுகொள்ளவில்லை.

மாகாணசபை என்பது நாட்டின் உடைய மூன்று தட்டு கட்டமைப்பில் ஒரு அமைப்பாக இருக்கிறது. இது தமிழ் மக்களுக்கான ஒரு கட்டமைப்பு அல்ல முழு நாட்டுக்குமான கட்டமைப்பு. தேர்தல்களை பொறுத்தவரையில் நாங்கள் பாரளுமன்ற தேர்தல்களில் பங்குபற்றி வந்து இருக்கின்றோம் அது ஒரு நடுநிலையான மையம் பகுதியான முழு நாட்டுக்குரித்தான கட்டமைப்பு அனால் மாகாணசபை தான் எங்களுடைய முழு தாயகத்துகமான கட்டமைப்பாக இருக்கிறது.

இதுவரை எங்களுடைய அரசியல் வாழ்கையில் நாங்கள் எப்பொழுதும் வெறும் சலுகையை நம்பியவர்களாகவே வாழ்ந்து இருக்கின்றோம் எங்களுடைய அரசியல் அவ்வாறே அமைந்து இருக்கிறது.

எங்களுடைய போராட்டங்கள் எவ்வாறாக இருந்தாலும் அரசாங்கம் சலுகை அடிபடியிலையே தமிழ் மக்களை கவனித்து வந்திருகின்றது. சலுகை என்பது அதை வளங்குகின்றவர்கள் அதை எந்த காலத்திலும் எப்பொழுது நினைத்தாலும் நிறுத்திவிடலாம் சலுகை அரசியலில்அவர்கள் நினைத்தபடி தானம் வழங்குவது போல் ஒரு நிலையே காணப்படுகின்றது. அனால் நாங்கள் இப்பொழுது இந்த வடமாகானசபையை கைபெற்றி சலுகை அரசியலுக்கு முடிவு கட்டவேண்டும்.

உரிமையோடு எங்களுடைய மக்களுக்கு நாங்களே எங்களுடைய மக்களின் தேவைகளை ஆய்ந்து ஆராய்ந்து முடிவு செய்து தீர்மானித்து திட்டமிட்டு முன்னெடுத்து அமுல் செய்வதற்கான ஒரு ஒரு கட்டமைப்பாக இதை பயன் படுத்தவேண்டும்.

எங்களுடைய உரிமைகளை எவராலும் இரத்து செய்யமுடியாது. எங்களுடைய பிரதேசங்களை நாங்களே நிர்வகிக்கின்ற உரிமைக்காக போராடுகின்ற செயல்படுத்த கூடிய ஒரு தளமாகவும், அபிவிருத்திக்கான அரசியல் தேவைககளை அரசியல் தீர்வை நோக்கி நகர ஒரு தளமாகவும் அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு வாழ்வாதாரம் மேம்பாடு போன்ற அம்சங்களை என்னுமொரு தளமாகவும் பாவித்து உரிமையுடன் செயல்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பாக வடமானசபையை உருவாகும் நோக்கிலே தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆகிய நாங்கள் போட்டி இடுகிறோம்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com