Home » , » தற்காலிக அடையாள அட்டைபெற விண்ணப்பிப்பதற்கான திகதி நீடிப்பு

தற்காலிக அடையாள அட்டைபெற விண்ணப்பிப்பதற்கான திகதி நீடிப்பு

தேர்தல் திணைக்களத்தால் ஆளடையாளத்தை நிரூபிக்கும் ஆவணங்கள் இல்லாத வாக்காளர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை செப்டம்பர் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களின் வாக்களிப்பதற்கு ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாத வாக்காளர்கள் தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.

 தற்காலிக அடையாள அட்டைகளை பெறுவதற்கு கிராம சேவகர்கள் அல்லது தோட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பப் படிவங்களை பெற்று அதனைப்பூர்த்தி செய்து இரண்டு புகைப்படங்களை இணைத்து அவர்களிடமே கையளிக்குமாறும் தேர்தல்கள் திணைக்களம் கேட்டுள்ளது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com