Home » » வாக்காளரின் விவரங்களை மீண்டும் கோரும் படையினர்; திரிசங்கு நிலையில் கிராம அலுவலர்கள்

வாக்காளரின் விவரங்களை மீண்டும் கோரும் படையினர்; திரிசங்கு நிலையில் கிராம அலுவலர்கள்

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் கிராம அலுவலர்களிடம் செல்லும் படையினர் அந்தப் பகுதி வாக்காளர்களின் விவரங்களைக் கட்டாயப்படுத்திப் பெற்று வருகின்றனர் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான "கபே'யிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 சீருடையில் கிராம அலுவலர்களின் அலுவலகங்களுக்குச் செல்லும் படையினர் கட்டாயப்படுத்தி வாக்களார்களின் விவரங்களைப் பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் விவரங்கள் வாக்களிக்கத் தகுதியுடையோரின் எண்ணிக்கை ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளவர்களின் எண்ணிக்கை தபால் மூலமாக வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களின் எண்ணிக்கை உட்படப் பல விவரங்களைப் படையினர் கட்டாயப்படுத்திப் பெற்று வருகின்றனர் எனக் கிராம அலுவலர்களால் தெரிவிக்கப்படுகிறது.

 இதனால் கிராம அலுவலர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதுடன் படையினர் கோரும் விவரங்களைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் ஆளாகின்றனர் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படையினர் உட்பட எவருக்கும் வாக்காளர் விவரங்களைக் கோரும் அதிகாரம் கிடையாது படையினர் கேட்டாலும் அவற்றை வழங்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கடந்த ஜூன் மாதம் சகல கிராம அலுவலர்களுக்கும் அறிவித்துள்ள நிலையில் படையினரின் இந்த நடவடிக்கை தொடர்பாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

 கடந்த ஜூன் மாத நடுப்பகுதியிலும் படையினர் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் கிராம அலுவலர்களிடம் சென்று வாக்காளர் விவரங்களைக் கோரியிருந்தனர். இந்த விடயம் தேர்தல் ஆணையாளரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னரே அவ்வாறு படையினருக்கு விவரங்களை வழங்க வேண்டாம் என ஆணையாளர் எழுத்து மூல உத்தரவை விடுத்திருந்தார்.

 இதன் பின்னர் வாக்காளர் விவரங்களைத் திரட்டும் நடவடிக்கையை இடைநிறுத்தியிருந்த படையினர் இப்போது அவற்றைக் கோரி வருகின்றனர் எனக் "கபே' அமைப்புக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com