நிரந்தரமான அரசியல் தீர்வினை நோக்கி நகர முடியும். எனவே இத்தேர்தலில் சகல தமிழ் மக்களும் வாக்களிக்க முன்வரவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் யாழ். வர்த்தக சங்கத் தலைவருமான இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்தார்.
வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவத்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர்மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணசபை என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முக்கியமான ஒன்றாக அமைகின்றது. இச்சபைக்கு தற்பொழுது முதன்முதலாக தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நான் போட்டியிடுகின்றேன். போரால் பாதிக்கப்பட்ட இப்பகுதியை அபிவிருத்தி செய்வதற்காகவும், இம்மக்களுக்கு உதவி செய்வதற்காகவும் நான் இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
எமது மக்கள் நீண்ட காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ முடியாதவர்களாகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த மக்களை அரசியல், பொருளாதார, வாழ்வியல் ரீதியாக மீட்சியடையச் செய்யவேண்டிய தேவை எமக்கு எழுந்துள்ளது.
இதனை உணர்ந்து கொண்டே நாம் தமிழ் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தி வருகின்றோம்.
இத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களிப்பதன் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வைக்க முடியும்.
மாகாண சபையில் அதிகாரம் இல்லையெனக் கூறப்பட்டாலும் இருக்கின்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு மக்களுக்கு உதவிகளைச் செய்துவருகின்றோம். சபையைக் கைப்பற்றுவதன் மூலம் தேவையற்றவர்களை விலக்கி வைக்க முடியும். எமக்கு கிடைக்கும் அதிகாரத்தை நாங்கள் பயன்படுத்தி எங்களை நாங்களே பலப்படுத்திக் கொள்ள முடியும்.
மக்களுக்காக மக்களுடன் பணியாற்றுபவர்களையும் மக்களுக்காக வாழ்வாதார முயற்சிகளைப் பெற்றுக் கொடுப்பவர்களையும் மக்கள் இனங்காண வேண்டும் எனவே அவர்களைத் தெரிவு செய்ய மக்கள் முன்வரவேண்டும்.
வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றியடைவதன் ஊடாக எமது உரிமைகளை விரைவாகவும் இலகுவாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே சகல தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து எமது கட்சியின் வெற்றியை உறுதிசெய்ய முன்வரவேண்டும். சகல மக்களும் வாக்களிப்பதன் ஊடாக எமது கட்சியின் வெற்றி உறுதிசெய்யப்படும் என்றார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment