யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், இரட்டை இலை சின்னத்தைக்கொண்ட ஜனநாயக ஐக்கிய முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை பாவித்து பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றது. கொக்குவில் மஞ்சபதி முருகன் ஆலயத்திற்கு அருகாமையில், பிரசார அலுவலகம் ஒன்றினை திறந்துள்ளது இது தேர்தல் மோசடியாகும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
அது மாத்திரமல்ல, வடமாகாணம் முழுவதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினை எதிர்க்க கூடியவர்கள், பிழை என்று சொல்பவர்கள். எவ்வளவு தூரம் வங்குரோத்து தனம் உடையவர்கள் என்பதை இதிலிருந்து உணர கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறான வங்குரோத்து தனமான சுயேட்சைக்குழுவோ இன்றேல் ஏனைய கட்சிகளோ தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை பாவிப்பதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை ஏனைய கட்சிகள் இன்றேல் சுயேட்சைக்குழுக்கள் பாவிப்பதனை தேர்தல் திணைக்களம் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது 5 கட்சிகளை உள்ளடக்கியதாகும் அவ்வாறே கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான கடிதம் தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, அவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால், இறக்கப்பட்ட சுயேட்சைக்குழ, அரசாங்கத்திடம் பல கோடி ரூபா பணத்தினை பெற்றுக் கொண்ட சுயேட்சைக்குழு மக்கள் மத்தியில் குழப்பநிலையை ஏற்படுத்துவதற்காக அமைந்துள்ளது. இவ்வாறான செயற்பாட்டை தேர்தல்கள் திணைக்களம் உடனடியாக நிறுத்தவேண்டும்.
அந்த வகையில், கூட்டமைப்பின் வெற்றியை தடுப்பதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. குழப்பநிலையினை ஏற்படுத்தற்கும் கூட்டமைப்பிற்கு விழும் வாக்குகளை விழாமல் பண்ணுவதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் இருந்து உத்தியோகத்தர்களை நியமிப்பது,இராணுவத்தினரை பயன்படுத்துவது, இவ்வாறான பல நடவடிக்கைகளை செய்து வருகின்றது, வாக்குவீதத்தினை குறைப்பதற்கு, குழப்பபுவதற்கு, செல்லுபடி அற்ற வாக்குகளை கொண்டு வருவதற்கு, ஏதோ ஒரு வகையில், தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெல்லுவதை தடைசெய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது இது மிக மிக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும் என்றார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment