யாழ் ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யுத்த காலத்தில் பலர் காணமல் போயியுள்ளனர். அவர்களுக்காகவும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையையும் கருத்திக்கொண்டே நான் போட்டியிடுகிறேன்.
பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் எனற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்றார். கடந்த காலத்தில் காணாமல் போனவர்களிற்காக நாம் குரல்கொடுத்து வந்துள்ளளோம் இதற்கு எமக்கு ஒரு பலம் தேவைப்பட்டது நான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் காணாமல் போனவர்களின் பிரச்சினையை சர்வதேச மட்டத்திற்குகொண்டு செல்லமுடியும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
இந்தத் தேர்தலில் போட்டியிடுவற்கு பல்வேறு எதிர்ப்புக்கள் மத்தியில் நான் போட்டியிடுகின்றேன். தோற்றுப்போன சமூகம் நாம் இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டிய தேவையிருக்கின்றது. இதுவரை காலமும் எங்கள் செய்த தியாகங்களும் சிந்திய குருதிகளும் வீண் போகாது எந்த என்பதை இந்த தேர்தலில் நாங்கள் நிரூபிப்போம் என்றார்.

.jpg)




.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment