சட்ட விதிகளை மீறுபவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், ஏற்கனவே வீதிகளில் பொறிக்கப்பட்ட சின்னங்களை அகற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நேற்றுக் காலை 10.30 மணிக்கு யாழ்.பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலளர் சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.நகர்ப்பகுதி மற்றும் ஏனைய இடங்களில் உள்ள காப்பெற் வீதிகளில் ஆளும் கட்சியின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.
இதனை உனடியாக நிறுத்துமாறும், எழுதியவற்றினை அகற்றுமாறும் யாழ்.மாநகர முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா அறிவுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருடைய நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது? யாழ்.நகர்ப் பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் இடங்களிலும் இவ்வாறான தேர்தல் பிரச்சார வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இச் செயற்பாடுகளை பொலிஸார் ஏன் தடுத்து நிறுத்தவில்லை? என்றும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த எஸ்.எஸ்.பி :- இச் செயற்பாடானது சட்டத்திற்குப் புறம்பானது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அதனை உடனடியான நிறுத்த வேண்டும். ஏற்கனவே வீதிகளில் எழுதப்பட்ட வாசகங்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வீதிகளில் தேர்தல் வாசகங்கள் எழுதும் போது பொலிஸார் காணவில்லை.
பொலிஸார் இல்லாத சமயம் பார்த்தே அவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்போம். இனிவரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்பவர்கள் அந்நடவடிக்கைகளை கைவிட வேண்டும். பொலிஸாரும் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் அவர் மேலு
ம் தெரிவித்தார்






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment