\
வலி. வடக்கைச் சேர்ந்த இடம் பெயர்ந்தவாக்காளர் வடம ராட்சியில் தங்கியுள்ளனர். இவர்கள் வலி.வடக்கு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பதற்குரிய போக்குவரத்து வசதிகளை இலவசமாக மேற்கொள்ளுமாறு அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தன. இதனைத் தேர்தல்கள் ஆணையாளர் ஏற்றுக்கொண்டார். யாழ். தீவகப் பகுதிக்குப் பிரசாரத்துக்குச் செல்லும் அரசியல் கட்சிகள் தேவை என்றால் பொலிஸ் பாதுகாப்புப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலப்பகுதியில் சிவிலியன்கள் யாரும் அனுமதி பெற்ற துப்பாக்கிகளையும் வைத்திருக்க முடியாது. அவ்வாறு வைத்திருந்தால் அவற்றைப் பறிமுதல் செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்துக் கருணாரட்ணவுக்கு நேற்று கலந்துரையாடலின் போது உத்தரவிட்டார். இராணுவத்தினர் தற்போது அரசியல் நடவடிக்கைகளில் தலையிடுகின்றனர். அவர்களையும் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யலாம் என அரசயில் கட்சி ஒன்றின் பிரதிநிதி தேர்தல்கள் ஆணையாளரிடம் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் இராணுவம் வீடுகளைக் கையளிப்பது, ஆளும் கட்சியின் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்படுதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பின்போது தேர்தல்கள் ஆணையாளரிடம் சுட்டிக்காட்டினோம். அவர் தகுந்த பதில் வழங்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment