அதன்படி எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் 3785 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 99 வீதமானவர்கள் இதுவரை சொத்து விபரங்களை ஒப்படைக்கவில்லை என ட்ரான்பெரன்சீ இன்டர்நெசனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.ருகுனகே தெரிவித்துள்ளார்.
எனவே போட்டியிடும் வேட்பாளர்கள் இம்மாதம் 30ஆம் திகதிக்குள் தமது சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை ஒப்படைக்குமாறும் தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நூற்றுக்கு ஒரு வீதமான வேட்பாளர்கள் கூட சொத்து விபரங்களை ஒப்படைக்கவில்லை.
தேர்தலில் வெற்றியீட்டும் அல்லது தோல்வியைத் தழுவும் வேட்பாளர்கள் அனைவரும் சொத்து விபரங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறுவோருக்கு எதிராக தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும்
தேர்தல் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment