Home » , » முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் தேர்தல்கள் ஆணையாளர் கலந்துரையாடல்

முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் தேர்தல்கள் ஆணையாளர் கலந்துரையாடல்

இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பிரதேசங்களில் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைப்பது தொடர்பாக முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் 23 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளார்.

 வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வெளி மாவட்டங்களில் தொடர்ந்து வாழும் மக்கள் வட மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக இடம்பெயர்ந்த மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கொத்தணி வாக்குச் சாவடிகளை அமைக்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எஸ்.ரீ.ஹசனலி தேர்தல் தினைக்களத்தில் கட்சி செயலாளர்களை தேர்தல்கள் ஆணையாளர் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தபோது கோரிக்கை விடுத்தார்.

 கடந்த தேர்தல்களின் போது இடம் பெயர்ந்த மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படாமல் வேறு இடங்களில் சாவடிகள் அமைக்கப்பட்டதால் அவர்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com