Home » , , » வாக்காளர் அடையாளத்தை வாக்கெடுப்பு நிலையத்தில் உறுதிப்படுத்தல் கட்டாயம்

வாக்காளர் அடையாளத்தை வாக்கெடுப்பு நிலையத்தில் உறுதிப்படுத்தல் கட்டாயம்

நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலின் போது வாக்காளர் ஒருவர் தனது ஆள் அடையாளத்தை வாக்கெடுப்பு நிலையத்தில் உறுதிப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

 வாக்கெடுப்பு நிலையத்தில் ஆள் அடையாளத்தை நிரூபிப்பதற்காக ஒவ்வொரு வாக்காளர்களினாலும் கீழ் காணும் அடையாள அட்டைகளில் ஒன்றை வாக்கெடுப்பு அலுவலருக்கு காண்பித்தல் கட்டாயமாகும்.

 தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை (ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்)

 2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்தலின் போது தேர்தல் திணைக்களத்தின் மூலம் அல்லது ஆட்பதிவுத் திணைக்களத்தின் மூலம் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகள் தற்போது வசிக்கும் கிராம அலுவலர்கள் ஊடாக 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவேட்டிற்கு உரியவாறு மீளவும் புதுப்பித்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com