வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுவும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்;. சகல வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்துள்ளன. இந்த வேட்பு மனுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் அவிறித்தல்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோல் இக்கட்சிகளுக்கான வேட்பாளர்களுடனான சந்திப்பு ஒன்றினை அடுத்த கிழமையும் நடத்தத் தீர்மானித்துள்ளோம் என்றார்.
இத்தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 பேரைத் தெரிவு செய்வதற்கு 104 பேர் வேட்பாளர்களாகக் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை 52, 402வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment