Home » , » சாவகச்சேரியில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு; சு.க. ஆதரவாளர்கள் காயம்

சாவகச்சேரியில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு; சு.க. ஆதரவாளர்கள் காயம்

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் இருவரின் ஆதரவாளர் குழுக்களுக்கிடையே நேற்றிரவு சாவகச்சேரியில் துப்பாக்கிச் சூடு மற்றும் கல் வீச்சுத் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன.

 இதில் சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் குமார் சர்வானந்தாவின் ஆதரவாளரான கொடிகாமம் பாலாவி தெற்கைச் சேர்ந்த கனகசிங்கம் நந்தகுமார் (வயது-29) என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிச் சாவகச்சேரி வைத் திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 இதேவேளை, இதேகுழுவைச் சேர்ந்த மற்றுமொரு ஆதரவாளரான கச்சாய் வடக்கைச் சேர்ந்த விஸ்வராஜன் விஸ்வரூபன் (வயது-30) என்பவர் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் வேட்பாளர் குமார் சர்வானந்தாவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, மூன்று வாகனங்களில் வந்த வேட்பாளர் அங்கஜனின் குழுவினரே எம்மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.

 நாம் அவர்களை நேரில் பார்த்தோம். இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் அங்கஜன் இராமநாதனுடன் தொடர்புகொள்ள முயன்றபோது அவரது கைத்தொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அங்கஜனின் பிரத்தியேக செயலாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, நாம் வழக்கம் போல் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு வரும் வழியில் சாவகச்சேரியில் எமது கட்சி அலுவலகத்தின் முன் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினோம்.

அவ்வேளை குமார் சர்வானந்தா அங்கஜனை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். பொலிஸார் அங்கஜனைத் தள்ளிவிட அவர் தப்பித்துக் கொண்டார். எனினும் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சன்னம் பாய்ந்தது. இதனால் அவர் காயமுற்றார் என்றார். இதுகுறித்து தாம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com