இடம்பெயர் மக்களுக்கு வசதியான இடங்களில் வாக்களிப்பதற்கு விசேட வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுவதுடன், இடம்பெயர் மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது. வடக்கில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தற்காலிக அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்க முடியும்.
தற்காலிக அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் மாதம் 10ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. வடக்கில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு படையினர் அச்சுறுத்தல் விடுப்பதாக இதுவரையில் உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் கிடைக்கவில்லை.
இம்முறை மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவோர் விதிமீறல்களில் ஈடுபடும் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment