தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் காணிகளை பெருமளவில் இராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். படையினர் குறித்த காணிகளிலிருந்து வெளியேறிய போதிலும் அந்தக் காணிகளை பொதுமக்களுக்கு பயன்படுத்த இன்னமும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அபிவிருத்தி என்ற பெயரில் அரசாங்கம் பாரியளவில் காணிகளை சுவீகரித்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணி சுவீகரிப்பு தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தி உரிய நடவடிக்கைகள் துரித கதியில் எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment