Home » , , , » காணிப் பிரச்சினை எதிர்காலத்தில் பாரிய விளைவுக்கு வழிவகுக்கும் சம்பந்தன் எச்சரிக்கை

காணிப் பிரச்சினை எதிர்காலத்தில் பாரிய விளைவுக்கு வழிவகுக்கும் சம்பந்தன் எச்சரிக்கை

அர­சியல் தீர்வு, 13ஆவது திருத்தத்திற்கு மேலான அதி­கா­ரப்­ப­கிர்வு, வாழ்­வா­தார மேம்­பாடு உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் ஐ.நா. வுக்கும் சர்­வ­தேச நாடு­க­ளுக்கும் உறுதி மொழிகள் வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் அர­சி­ய­ல் அமைப்பின் 13ஆவது திருத்­தத்தைப் புறக்­க­ணிக்­கவோ

அல்­லது  தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­பட்டு இலங்கை - இந்­திய உடன்­ப­டிக்­கையை இரத்துச் செய்­யவோ முயற்­சிக்க முடி­யாது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­கோ­ண­மலை மாவட்ட எம்.பி.யுமான  இரா.சம்­பந்தன் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

வடக்­கிலே நில­வி­யுள்ள காணிப்­பி­ரச்­சி­னை­யா­னது எதிர்­கா­லத்தில் பாரிய விளை­வு­க­ளுக்கு வழி வகுக்கும் என்­பதால் அர­சாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்­ப­துடன் அங்கு நிலவும் நீதி­யற்­றதும்

நியா­ய­மற்­ற­து­மான நிலை­மைக்கு தீர்வு காணு­மாறும் கேட்­டுக்­கொள்­கிறேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை அமர்வின் போது வடக்கு, -கிழக்கில் எழுந்­துள்ள காணி விவ­காரம் தொடர்­பி­லான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை ஒன்றை சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­யி­லேயே சம்­பந்தன் எம்.பி. மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். பிரே­ர­ணையை சமர்ப்­பித்த அவர் சுமார் ஒரு மணித்­தி­யா­லத்­திற்கும் மேலாக உரை நிகழ்த்­தி­ய­துடன் வடக்கு, கிழக்கில் இடம்­பெற்று வரும் காணி சுவீ­க­ரிப்பு, இரா­ணுவ மற்றும் சிங்­க­ளக்­கு­டி­யேற்றம் உள்­ளிட்ட விட­யங்­களை புள்­ளி­வி­ப­ரங்­க­ளு­டனும் முன் வைத்தார்.

 சம்­பந்தன் எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

வடக்­கிலும் திரு­கோ­ண­ம­லை­யிலும் தமிழ் மக்­க­ளுக்கு சொந்­த­மான காணி விவ­கா­ரத்தில் நிலவி வரும் சிக்கல் நிலை­மைகள் காணி அப­க­ரிப்­புகள்  மக்­களின் விவ­சாய வாழ்­வா­தார நிலை­மைகள் தொடர்பில் நாம் அர­சாங்­கத்­திற்கும் ஜனா­தி­ப­திக்கும் பல தட­வை­களில் எடுத்­து­ரைத்­துள்ளோம் எனினும் இது­வ­ரையில் நாம் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினைப்  பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு அர­சாங்கம் துணி­ய­வில்லை என்று  தெரிவித்தார்.

இந்தப் பிரச்­சி­னைக்கு கலந்­து­ரை­யா­டல்கள் மூலம் தீர்­வினைப்  பெற்­றுக்­ கொள்­வ­தற்­கா­கவே இந்த விவ­கா­ரத்தை பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்டு வந்­துள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

வலி­காமம் வடக்கில் 6300 ஏக்கர் காணிகள் அர­சாங்­கத்­தினால் சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இது கொழும்பு மாவட்­டத்தின் மூன்றில் இரண்டு மடங்­காகும். இந்த காணி­களைக் மீளப்­பெற்­றுக்­கொள்ளும் வகையில்  உரி­மை­யா­ளர்கள் வழக்­கு­களைத் தொடர்ந்­துள்­ளனர்  என்றும் தெரிவித்தார்.

அத்­துடன் முன்னாள் அமைச்சர் லக் ஷ்மன் கதிர்­கா­மரின் மகனும் தனது காணி சுவீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­மைக்கு எதி­ராக நீதி­மன்­றத்தை நாடி­யுள்ளார். உயர் பாது­காப்பு வலயம் என்ற தோர­ணையில் வடக்­கிலும் சம்­பூ­ரிலும் பல காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன எனக் குறிப்பிட்டார்.

சம்­பூரைப் பொறுத்­த­வ­ரையில் அனல் மின் நிலை­யத்­துக்கு தேவை­யான காணியைத் தவிர ஏனைய காணிகள் பொது­மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் என ஜனா­தி­ப­தி­யினால் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது. ஆனாலும் அது இது­வ­ரையில்

இடம்­பெ­ற­வில்லை. அங்கு 1400 குடும்­பங்­க­ளுக்கு சொந்­த­மான காணிகள் இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை என்றார்.

முல்­லைத்­தீவில் கேப்­பாப்­பி­லவு, ஒட்­டி­சுட்டான் மற்றும் மாங்­குளம் போன்ற பகு­தி­க­ளிலும் தமிழ் மக்­க­ளுக்கு சொந்­த­மான காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்டு இராணுவ முகாம்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. இதே­போன்று தலை­மன்­னாரில் 30 ஏக்கர் காணி கடற்­ப­டை­யி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் கிளி­நொச்­சியில் பத்­தா­யிரம் வீடுகள் இரா­ணு­வத்­துக்­காக நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன எனக் குறிப்பிட்டார்.

வெல்­லங்­கு­ளத்தில் 600 ஏக்­கரில் கஜு உற்­பத்­தியும் 100 ஏக்கர் நிலத்தில் தென்­னையும் பயி­ரி­டப்­பட்­டுள்­ளது. விவ­சாய உற்­பத்­தி­களில் இரா­ணுவம் ஈடு­பட தேவை­யில்லை. இரா­ணு­வத்தின் விவ­சாய நட­வ­டிக்­கை­க­ளுக்கு அனைத்து உத­வி­களும் பெற்றுக் கொடுக்­கப்­ப­டு­கின்­றன. ஆனாலும் பொது­மக்கள் தமது விவ­சாய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­யா­துள்­ளனர் என்றார்.

அபி­வி­ருத்தி என்ற பெய­ரி­லேயே காணி ஆக்­கி­ர­மிப்­புகள் இடம்­பெற்று வரு­கின்­றன. யாழ்ப்­பா­ணத்தில் பாரிய காணி ஆக்­கி­ர­மிப்­பினை மேற்­கொண்­டுள்ள அர­சாங்கம் அங்கு இரா­ணு­வத்தைக் கொண்டு யோகட் உற்­பத்தி மேற்­கொள்­கின்­றது எனக் குறிப்பிட்டார்.

கிண்­ணி­யாவில் சுடுநீர்க் கிணறு என்­பது வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒன்­றாகும். எனினும் அங்­கி­ருந்த பிள்­ளையார் கோயில் அகற்­றப்­பட்டு அங்கு புத்தர் அமர்ந்­தி­ருக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. இவ்­வி­டயம் தொடர்பில் அமைச்­ச­ருக்கு கடிதம் மூலம் அறி­வு­றுத்தி தலை­யீடு செய்து ஆரா­யு­மாறு கோரிய போதும் அது பற்றி கவனம் ெசலுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை எனக் குறிப்பிட்டார்.

இவ்­வாறு தமிழ் மக்­க­ளுக்கு ச ந்­த­மான காணி விடயம் தொடர்பில் எமது முறைப்­பா­டுகள் எதுவும் கவ­னத்­திற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இன்று அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் மத்­தியில் பல்­வேறு கருத்­துக்கள் இருந்து வரு­கின்­றன என்று குறிப்பிட்டார்.

ஐ.நா. செய­லாளர் நாய­கத்­துடன் இணைந்து ஜனா­தி­பதி கூட்­ட­றிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருந்தார். இதன் போது அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்தும் 13 ஆவது திருத்தம் மற்றும் 13+ குறித்தும் பல்­வேறு உறுதி மொழிகள் வழங்­கப்­பட்­டன என்றும் தெரிவித்தார்.

அது மாத்­தி­ர­மன்றி, இந்­தி­யா­வுடன் பேச்­சுக்­களை நடத்­திய ஜனா­தி­பதி மற்றும் அமைச்­சர்­களும் 13+ குறித்து பிரஸ்­தா­பித்­தனர். அது மாத்­தி­ர­மின்றி வெளி­வி­வ­கார அமைச்சு, இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சு மட்­டத்­திலும் பேச்­சுக்கள் இடம்­பெற்ற சந்­தர்ப்­பங்­களில் 13+ குறித்தும் அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்தும் உறுதி மொழிகள் பரி­மா­றப்­பட்­டன என்று குறிப்பிட்டார்.

இவ்­வாறு ஐ.நா. விலும் சர்­வ­தேச நாடு­க­ளி­டமும் அதி­காரப் பகிர்வு குறித்து 13க்கு அப்பால் சென்று அதி­கா­ரங்­களை வழங்கி பிரச்­சி­னைக்கு தீர்வு காணப் போவதாகவும் உறுதியளித்திருக்கின்ற நிலையில் தான் தோன்றித்தனமாக செயற்பட்டு 13 ஆவது திருத்தத்தை புறக்கணிக்கவோ அல்லது இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை இரத்துச் செய்யவோ முடியாது என்று தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு காணி விவகாரம் தொடர்பில் நாம் பல முறை அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எடுத்துக் கூறியிருந்தும் எமக்கு சரியான பதிலும் கிடைக்கவில்லை. தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேற்படி காணிப் பிரச்சினையானது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவே நீதியற்றதும் நியாயமற்றதுமான இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றேன் என்றார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com