Home » , » ஜே.வி.பி. வேட்பாளர்கள் இருவருக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவினர் அச்சுறுத்தல்

ஜே.வி.பி. வேட்பாளர்கள் இருவருக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவினர் அச்சுறுத்தல்

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஜே.வி.பி. வேட்பாளர்கள் இருவரது வீடுகளுக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவினர் அச்சுறுத்தியது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 மன்னார் மாவட்டத்தில் ஜே.வி.பி கடந்த 01ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்தது அன்று மாலை 3.00 மணியளவில் எமது வேட்பாளர் எஸ். ரமேஷ்குமாரின் வீட்டுக்கு சைக்கிளில் சென்ற இராணுவ புலனாய்வுப்பிரிவினர் ரமேஷ்குமாரிடம் தேர்தலில் போட்டியிடுகின்றீர்களா? எனக்கேட்டுள்ளனர். அவர் அச்சத்தில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

உடனே புலனாய்வுப்பிரிவினர் அவரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக்கூறு இது நீர்தானே எனக்கேட்டுள்ளனர். அவர் மறுக்க முடியாமல் நான்தானென ஒத்துக்கொண்ட பின்னர் நீர் ஏன் போட்டியிடுகின்றீர் எனக்கேட்டு அச்சுறுத்தியுள்ளனர். கிளிநொச்சியில் ஜே.வி.பி.யின் முதன்மை வேட்பாளர் ராஜேந்திரனின் வீட்டுக்குச் சென்ற இராணுவ புலனாய்வுப்பிரிவினர் அச்சுறுத்தும் பாணியில் அவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

என்ன அதிகாரத்தின் கீழ் இராணுவ புலனாய்வுப்பிரிவினர் வேட்பாளர்களிடம் விசாரணை நடத்துகின்றனர் எனத் தெரியவில்லை. எனவே இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளோம் என்றும் விஜித ஹேரத் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com