Home » » வடமாகாண தேர்தலில் யாழில் போட்டியிடவுள்ள சுயேட்சை வேட்பாளர் மரணம் ( 2ம் இணைப்பு )

வடமாகாண தேர்தலில் யாழில் போட்டியிடவுள்ள சுயேட்சை வேட்பாளர் மரணம் ( 2ம் இணைப்பு )

வடமாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் யாழில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை காலை யாழ்.சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் எஸ். இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக இன்று சனிக்கிழமை கலை மீட்கப்பட்டுள்ளார் என யாழ்.சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணம் சுன்னாகம், ஸ்டேசன் வீதியில் சிறிய கோயில் ஒன்றில் இருந்தே இவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் வடமாகாண சபைத் தேர்தல் ஆரம்பிக்கப்பட்டு யாழ்.மாவட்டத்தில் முதல் உயிர் கொலை செய்யப்பட்டுள்ளது.

வன்முறைச் சம்பவங்களில் இரண்டாவது வன்முறைச் சம்பவம் என யாழ்.பொலிஸ் தலமையகம் குறிப்பிட்டுள்ளது.




2ம் இணைப்பு 

 சுன்னாகம் புகையிரத நிலையத்திக்கு அருகாமையில் உள்ள வைரவர் ஆலய மண்டபத்தில் இன்று காலை கண்டெடுக்கப்படட சடலம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் இராமச்சநதிரன் வயது 73 என்பவருடையதாகும் என மனைவியினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

 இன்ற அதிகாலை மரணம் அடைந்த நிலையில் கண்டு பிடிக்கப்படட சடலம் கிராம அலுவலருக்கு பொது மக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து சுன்னாகம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிசார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

 மல்லாகம் நீதவான் நிதிமன்ற நீதிபதியினால் மேற் கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனை செய்யும் படி கட்டளையிடப்பட்டுள்ளது. இதே வேளை மரணம் அடைந்த நிலையில் காணப்பட்டவர் கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக மனைவி பிள்ளைகளை பிரிந்து தனிமையில் வாழந்து வந்துள்ளார்.

 வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேச்சையாக கட்டணப்பணம் செலுத்தியுள்ளதுடன் அவருக்கு பாம்பு சின்னமும் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் ஒருவர் மரணம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com