Home » , , » வடக்குத் தேர்தலில் நம்பிக்கை இல்லை; அரசைச் சாடுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில்

வடக்குத் தேர்தலில் நம்பிக்கை இல்லை; அரசைச் சாடுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில்



வட மாகாண சபைத் தேர்தல் நீதியாக நடைபெற போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றமளிக்கிறது'' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, டில்லிக்கு செல்லும் வழியில் நேற்று சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

 "தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகின்றனரே'' என சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் மாத்திரமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று ரணில் பதிலளித்தார். "வடமாகாண சபைத் தேர்தல் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்பதே எதிர்க் கட்சிகள் அனைத்தினதும் விருப்பமாகும்.

இருப்பினும், வட மாகாணசபைத் தேர்தல் நீதியாக நடைபெற போதுமான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. இது எமக்கு ஏமாற்றமளிக்கிறது. இலங்கை அரசால் தமிழ், முஸ்லிம்கள் மட்டுமன்றி சிங்களவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2014ஆம் ஆண்டில் இலங்கையில் பொதுத் தேர்தலொன்றை நடத்த வலியுறுத்தி பிரசாரம் மேற்கொள்ளப்படும்'' என்றும் அவர் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com