Home » , » நெடுந்தீவு சம்பவத்துக்கும் தமக்கும் எதுவித தொடர்புமில்லை! வன்மையாக கண்டிக்கிறோம்!- ஈ.பி.டி.பி. அறிக்கை

நெடுந்தீவு சம்பவத்துக்கும் தமக்கும் எதுவித தொடர்புமில்லை! வன்மையாக கண்டிக்கிறோம்!- ஈ.பி.டி.பி. அறிக்கை

நெடுந்தீவுச் சம்பவம் ஈ.பி.டி.பி மீது சேறு பூசும் நோக்கம் கொண்டதாகும். நெடுந்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குலுக்கும் எமக்கும் எதுவித தொடர்புமில்லை. இத் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறு ஈ.பி.டி.பி அறிக்கை வெளியிட்டுள்ளது

. நெடுந்தீவில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. நெடுந்தீவில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தாக்கப்பட்டமை போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் எங்கும், யாருக்கு எதிராகவும் நடைபெறக் கூடாது.

இவ்வாறான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். வட மாகாணசபை தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடும் அனைவரும் சுதந்திரமாகவும், பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாமலும் செயற்பட வேண்டும். வட மாகாண சபை என்பது எமது அரசியல் போராட்டத்தின் வெற்றிகளில் முக்கியமான தருணமாகும். இது நாம் ஏற்படுத்திய ஜனநாயகப் பயணம். யாரும் போட்டியிடவும், எப்பகுதி மக்களையும் சந்திக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு.

அதைத்தடுக்கும் வகையில் எவரும் செயற்படக் கூடாது. ஜனநாயக மீறலாகவும், தேர்தல் சட்டங்களுக்கு எதிராகவும் நடைபெறுகின்ற அனைத்துச் செயற்பாடுகளையும் நாம் கண்டிக்கின்றோம். நீதியும், சுதந்திரமுமான தேர்தல் வடக்கில் நடைபெறுவதை தேர்தலில் போட்டியிடும் அனைவரும் மனதில் நிறுத்தி செயற்படுவதையே நாம் விரும்புகின்றோம் என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com