இந்தியாவின் பிரதம தேர்தல் ஆணையாளர் வீ.எஸ். சம்பத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறும் தேர்தல்களை கண்காணிக்குமாறு கோரி இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், சார்க் நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வெளிப்படைத் தன்மையுடன் தேர்தலை நடாத்தவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பெரும்பாலும் பங்கேற்பார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்றைய தினம் புது டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் சந்திக்க உள்ளார். அமர்வுகளில் பங்கேற்குமாறு நேரில் அழைப்பு விடுக்கும் நோக்கில் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை அமைச்சர் பீரிஸ் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 13ம் திருத்தச் சட்டம், அரசியல் தீர்வுத் திட்டம், இந்திய மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment