Home » , » தேர்தல் முறைகேடு நடந்தால் முதலில் ஜனாதிபதிக்கு கூறுங்கள்; கூட்டமைப்பினரிடம் பஸில் கோரிக்கை

தேர்தல் முறைகேடு நடந்தால் முதலில் ஜனாதிபதிக்கு கூறுங்கள்; கூட்டமைப்பினரிடம் பஸில் கோரிக்கை

வடக்குத் தேர்தலில் ஏதாவது முறைகேடுகள் வன்முறைகள், அநீதிகள் இடம்பெற்றால் அது தொடர்பில் கூட்டமைப்பினர் முதலில் ஜனாதிபதியிடமே தெரிவிக்க வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அறிவுரை கூறியுள்ளார்.

 வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களைப் படைத் தரப்பினர் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவதாக, பொதுநலவாய அமைப்பின் தேர்தல்கள் கண்காணிப்பு அதிகாரிகளிடம் கூட்டமைப்பினர் முறையிட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவித்ததாவது: எமது அரசைப் பொறுத்த வரையில் வடக்குத் தேர்தலில் பெறப்படுகின்ற எந்தவொரு முடிவும் எம்மைப் பாதிக்காது. எமக்கு எந்தவொரு தாக்கத்தையும் அதுசெலுத்தப் போவதுமில்லை. வடக்கு என்பது அரசுக்கு ஒரு மாகாணசபை மட்டுமேயாகும். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஏதாவது அநீதிகள், அநியாயங்கள் நடைபெற்றால் அது தொடர்பில் கூட்டமைப்பினர் முதலில் ஜனாதிபதியிடம் தெரிவிக்கலாம்.

 பொதுநலவாயப் பிரதிநிதிகளிடம் தெரிவிப்பதற்கு முன்னர் இந்த விடயங்கள் குறித்து முதலில் ஜனாதிபதியிடம் தெரிவித்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வடக்கில் ஆளும்கட்சிக்கு வாக்களித்தால் முதலமைச்சரை தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும். ஆனால் கூட்டமைப்பில் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்தால் அந்தச் சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்காது போகும் என்றார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com