சாவகச்சேரிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் அங்கஜன் இராமநாதன் குழுவினரும் அக்கட்சியைச் சேர்ந்த சர்வானந்தாவின் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தின்போது துப்பாக்கிப் பிரயோகத்தினால் சர்வானந்தாவின் வாகனச்சாரதியும் அங்கஜனின் பாதுகாப்புப் பிரிவுப் பொலிஸ் உத்தியோ கத்தரும் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலின் பின்னணியில் சர்வானந்தா பதிவு செய்த முறைப்பாட்டிற்கு அமைய இராமநாதனை பொலிஸார் நேற்று மாலை 5.15 மணியளவில் கைது செய்துள்ளனர். இதேவேளை இத்தாக்குதலை நடத்தியவர் என சந்தேகிக்கப்படுகின்ற இராமநாதனைச் கைதுசெய்யாதுவிடின் கட்சி நடவடிக்கைகளிலிருந்து விலகப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற ஏனைய நான்கு உறுப்பினர்களான சர்வானந்தா, அகிலதாஸ், றெமிடியஸ், பொன்னம்பலம் ஆகியோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment