இது தொடர்பில் இன்னும் இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் முதன்மை வேட்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காரைநகரில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டது. அதற்கான காரணவாதிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று சாவகச்சேரியில் ஆளும் கூட்டணி கட்சி வேட்பாளர் ஒருவர் மீது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் அங்கஜனின் தந்தை துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார்.
எனவே யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தேர்தலில் இருந்து விலகுவது குறித்து ஆராய்வதாக துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும் யாழ்ப்பாண பொலிஸார் இன்று அங்கஜனின் தந்தையை கைது செய்துள்ளமையும் தமக்கான பாதுகாப்பை உறுதி செய்துள்ளமையையும் அடுத்து இன்னும் இரண்டு நாட்களுக்கு தமது தேர்தல் போட்டி விலகல் முடிவை பின்தள்ளி வைத்துள்ளதாகவும் துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment