Home » » காவல் துறையினரின் உதவியுடன் தேர்தல் சட்டங்கள் மீறப்படுகிறது: ட்ரான்ஸ்பரன்சீ இன்டர்நசனல்

காவல் துறையினரின் உதவியுடன் தேர்தல் சட்டங்கள் மீறப்படுகிறது: ட்ரான்ஸ்பரன்சீ இன்டர்நசனல்

நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் சட்டங்களை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என ட்ரான்ஸ்பரன்சீ இன்டர்நசனல் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.

 தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது சட்ட விதிகள் மீறப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இந்த சட்ட மீறல்களுக்கு எதிராக காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகமாக அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

 தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இவ்வாறு வாகனங்களை சட்டவிரோதமாகப்பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக பொதுச் சொத்துக்களை பயன்படுத்துதல் இலங்கை நிதிச் சட்டங்களின் அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவித்துள்ளது.

சில வாகனங்களில் அரசாங்க திணைக்களங்களினது பெயர் மற்றும் இலச்சினை மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் அரசாங்கம் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த நிறுவனம் மேலும் குற்றம் சுமத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com