சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைப்பதற்காக இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாகாண சபைத் தேர்தல்களுக்கு செலவிடப்படும் 1500 மில்லியன்களுக்கு மேலதிகமாகவே இந்த 20 மில்லியன் ரூபாய்கள் கோரப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல்களுக்காக சர்வதேசத்தில் இருந்து 11 கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான முறையில் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டும்: ஜனாதிபதி
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் நியாயமான முறையில் வெற்றியீட்ட வேண்டுமென அமைச்சர்களின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எப்படியாவது தேர்தலில் வெற்றியீட்ட வேண்டும் எனக் கருதவில்லை.
போரின் பின்னர் நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலின் போது கண்டியில் குழப்பம் விளைவிக்கப்பட்டது.
அமைச்சர் மஹிந்தானந்தவின் நடவடிக்கைகளினால் இவ்வாறு குழப்பம் ஏற்பட்டது. குறிப்பாக எம்மவரிடையே போராட்டங்கள் இடம்பெறுவதனை அனுமதிக்க முடியாது.
குருணாகல் மற்றும் மாத்தளை பிரதேசங்களில் சர்ச்சைகள் எழுந்துள்ளதாக கேள்விப்பட்டேன் என ஜனாதிபதித் தெரிவித்துள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment