Home » , , » தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அஷ்ஷெய்க் அஸ்மினுக்கு அச்சுறுத்தல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அஷ்ஷெய்க் அஸ்மினுக்கு அச்சுறுத்தல்

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பின் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வடக்கின் பொது முஸ்லிம் வேட்பாளர் அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு சிலரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவரது வீட்டிற்கு வருகை தந்த புலானாய்வுப் பிரிவினர் இவர் குறித்த விபரங்களை அக்கம் பக்கத்தவர்களிடம் விசாரித்துள்ளதோடு, எதற்காக இவர் த.தே.கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார் எனவும் கேட்டுள்ளனர்

அதன் பின்னர் கேகாலை மாவட்டத்தில் மாவனல்லையில் அமைந்துள்ள அவரது மனைவி மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்ற குறித்த புலானாய்வுப் பிரிவினர் தாம் பொலிஸில் இருந்து வருவதாகக் கூறி வேட்பாளர் குறித்த விபரங்களைப் பெற முயன்றுள்ளதோடு அவரது குடும்பத்தாருக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் குறித்த எதற்காக அவர் த.தே.கூ வில் போட்டியிடுகின்றார் என்றும் வினவியுள்ளனர்.



0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com