மன்னார் புதுக்கமத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான ஆசிரியர் யூட்குரூஸ், வைத்தியர் என்.குணசீலன் மற்றும் ஏனைய வேட்பாளர்களை ஆதரித்து நேற்று இடம் பெற்ற பிரச்சார கூட்டத்திலேயே அவ்வாறு இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,,,,,
வடமாகாணசபை தேர்தலை எமது மக்கள் சரியாக பயன்படுத்தி தமது இருப்பையும்,அடையாளத்தையும் பாதுகாப்பதுடன் கடந்தகாலங்களில் ஏற்பட்ட இழப்புக்கள், அழிவுகள், உயிர் தியாகங்களுக்கு ஈடான பூரண சுதந்திரத்தையும் நிரந்தரமான தீர்வையும் ஏற்படுத்தும் தளமாகவும், களமாகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாம் இத்தேர்தலில் போட்டியிடாது விட்டால் அரசின் கூலிக்கு அரசியல் செய்யும் பிழையான சக்திகளிடம் மாகாணசபை சென்றால் என்ன நடக்கும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டிய நேரமாகவுள்ளது.
எமது உரிமைக்காக நடந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தி அரசியல் இடைவெளியை நீட்டி அதிகரிக்கச் செய்து இன்னும் அறுபது ஆண்டுகள் தமிழர்களை அடிமைகளாக வைத்திருப்பவர்களுக்கு வழியை ஏற்படுத்தி விடும்.
ஆகவே தான் அந்த அடிப்படையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இத்தேர்தலை பயன்படுத்துவதோடு முதலமைச்சர் வேட்பாளர் உட்பட பல்துறைகளையும் உள்ளடக்கிய தரமான வேட்பாளர்களை மாகாணம் பூராகவும் களம் இறக்கியுள்ளது.
இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி மாகாண சபைக்குரிய குறைந்த பட்ச சட்டங்களைக் கொண்டு அரசியல் நோக்கம் கருதிய பிழையான காணி அபகரிப்பு, அச்சுறுத்தல்கள், தகுதியற்ற அரசியல் நியமனங்கள் சலுகைகளைக்காட்டி எமது அரசியல் உரிமைகளை பறிக்கும் செயற்பாட்டினையும் தடுத்து நிறுத்தவும் உங்கள் பெறுமதியான வாக்ககுகளை செலுத்த வேண்டும்.
அதனூடாக இவ்வரசுக்கும் உலகத்திற்கும் உரத்த குரலில் எடுத்துரைத்து பூரண சுதந்திரத்துடன் கௌரவமான நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தமிழர்கள் ஓயமாட்டார்கள் என்கின்ற செய்தியை சொல்வதற்கும் ஜனநாயக அரசியல் போராட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகளை அதிகரிப்பதற்கும்
எமது உரிமைகளை பெறுவதற்கும் உங்கள் வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென அன்போடு எமது மக்களை கேட்டுக்கொள்கின்றேன்.என தெரிவித்தார்.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment