ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விசேடமாக என்ன விடயங்களை முன்வைக்கப் போகின்றது என்ற கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே முன்னாள் நீதியரசரும் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
திருமதி நவநீதம்பிள்ளையிடம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக எடுத்துக் கூறுவோம். குறிப்பாக காணாமல் போனோர் விவகாரம் முக்கிய பிரச்சினையாக இன்று உருவெடுத்துள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு பல தடவைகள் கொண்டு வந்துள்ளோம். எனினும் உரிய முறையில் இதுவரை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை, இவ்வாறான சூழலில் எமது பிரச்சினைகள் குறித்து செவிமடுப்பவர்கள் மற்றும் கவனத்தில் கொள்வோரிடம் அது குறித்து நாம் கூற வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
அந்த வகையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்ற உண்மை நிலைமையை அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்து வருகின்றனர்.
குறிப்பாக எமது வேட்பாளர் ஒருவர் கூட தனது கணவரை படையினரிடம் ஒப்படைத்த நிலையில் இன்றுவரை அவருக்கு என்னவானது என்று அறியாதவராக காணப்படுகின்றார். இவ்வாறு வடக்கில் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தமது உறவுகளை தொலைத்த மக்கள் அன்றாடம் கண்ணீருடனேயே தங்கள் வாழ்க்கையை கடத்தி வருகின்றனர்.
குறைந்த பட்சம் காணாமல் போனவர்களுக்கு என்னவானது என்று பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு சம்பந்தப்பட்டவர்களுக்கு உண்டு என்பதை அவர்கள் மறந்து போகக் கூடாது. எனவே இவ்விவகாரம் தொடர்பில் நாம் கூடிய கவனத்தைச் செலுத்துமாறு நவம்பிள்ளையிடம் கோருவோம். கணவனை பறிகொடுத்த மனைவி, பிள்ளையை பறிகொடுத்த பெற்றோர், அவ்வாறே பெற்றோரைப் பறிகொடுத்த பிள்ளைகள் என வடக்கில் பலரும் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment