தேர்தல்கள் திணைக்கள உத்தரவின்படி சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் உடனடியாக இவற்றை அகற்ற வேண்டும் என்று வட மாகாணப் பிரதித் தேர்தல் ஆணையாளரும், யாழ்.மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான சி.அச்சுதன் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில், பெரும்பாலும் நகர்ப்புறங்களை அண்மித்து தேர்தல் சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
அவற்றைப் பொலிஸார் அகற்ற நடவடிக்கை எடுக்காமை குறித்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேர்தல் சட்ட விதிமுறைகளின் படி இத்தகைய சுவரொட்டிகள், பதாகைகளைக் காட்சிப்படுத்த முடியாது. மீறுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே தான் இது தொடர்பில் வடமாகாணத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் எந்த இடத்திலும் தேர்தல் சுவரொட்டிகள், பதாகைகள் காட்சிப்படுத்த முடியாது என்றார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment